மழைக்காலம் வந்தாலே மாலை நேரத்தில் சுவையான ஸ்நாக்ஸ் எதாவது சாப்பிட தோன்றும். அதிலும், பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளுக்கு வீட்டிற்கு வந்தவுடன் சுவையாக ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். உங்கள் வீட்டில் முட்டை இருந்தால் போதும். அதை வைத்து அருமையான கபாப் ஒன்று செய்து கொடுக்கலாம். இதை கெட்சப் உடன் பரிமாறினால் போதுமானதாக இருக்கும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் இப்போது முட்டை கபாப் எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • முட்டை - 6
  • கடலை மாவு - 150 கிராம்
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
  • பிரட் தூள் - 1 கப்
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு1 1/2 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப

இந்த ஒரு டீ குடிச்சா போதும் சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாத்தையும் விரட்டிடலாம்…

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் முட்டைகளை சேர்த்து 15 நிமிடங்களுக்கு நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  • நன்கு வெந்த முட்டைகளை எடுத்து தோல் உரித்து, ஒரு கிண்ணத்தில் துருவி கொள்ளுங்கள்.
  • இப்போது அத்துடன், கடலை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகுத்தூள். மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். நீர் அதிகமாக ஊற்றிட வேண்டாம்.
  • அடுத்ததாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றி கொள்ளவும்.
  • எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை உங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் பிடித்து, பிரட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • தயாரான முட்டை கபாப்களை தக்காளி கெட்சப் உடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்…